Wednesday, November 6, 2024

கோவை: புதிய தகவல் தொழில்நுட்ப வளாகத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தனது முதல் கள ஆய்வினை, மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.

கோவை,

தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.அதன்படி தனது முதல் கள ஆய்வினை, மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார்.இதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து காரில் விளாங்குறிச்சிக்கு சென்றார். அங்குள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில், ரூ.114.16 கோடியில் 8 தளங்களுடன் புதிதாக தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024