இயக்குநரான சசிகுமார் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கருடன் ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படிக்க: புதிய வீட்டுக்கு குடியேறிய ஹன்சிகா..!
அடுத்ததாக, இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் ஃபிரீடம் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க:இயக்குநரான ஜோஜு ஜார்ஜ்..! சூர்யா வாழ்த்து!
இந்தப் படத்தில் லிஜோமோல் நாயகியாக நடித்துள்ளார். இதன் கிளிம்ஸ் விடியோ வரும் அக். 20ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.