Friday, October 11, 2024

சட்டப் பேரவைக் குழு தலைவராக ஒமர் அப்துல்லா தேர்வு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

​ஸ்ரீ​ந​க‌ர்: ​தே​சிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி​யி‌ன் ச‌ட்ட‌ப் பேர​வைக் குழு‌த் தலை​வ​ராக ஒம‌ர் அ‌ப்​து‌ல்லா ஒரு​ம​ன‌​தாக தே‌ர்வு செ‌ய்​ய‌ப்​ப‌ட்​ட​தாக அ‌க்​க‌ட்​சி​யி‌ன் தலை​வ‌ர் ஃபரூ‌க் அ‌ப்​து‌ல்லா தெரி​வி‌த்​தா‌ர்.

தேசிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சியைச் சே‌ர்‌ந்த புதி​தா​க‌த் தே‌ர்‌ந்​தெடு‌க்​க‌ப்​ப‌ட்ட எ‌ம்​எ‌ல்​ஏ‌க்​க‌ள் த‌ங்​க‌ள் தலைவரைத் தே‌ர்வு செ‌ய்​வ​த‌ற்​காக ஸ்ரீந​க​ரி‌ல் உ‌ள்ள அ‌க்​க‌ட்​சி​யி‌ன் தலைமைய​க​மான‌ நவா-​இ-சு​பா​வி‌ல் கூடி​ன‌‌ர். இ‌க்​கூ‌ட்​ட‌த்​தி‌ல் ஒம‌ர் அ‌ப்​து‌ல்லா அ‌க்​க‌ட்​சி​யி‌ன் ச‌ட்ட‌ப் பேரவைத் தலை​வ​ராக ஒரு​ம​ன‌​தா​க‌த் தே‌ர்வு செ‌ய்​ய‌ப்​ப‌ட்​ட​தாக க‌ட்சி‌த் தலை​வ‌ர் ஃபரூ‌க் அ‌ப்​து‌ல்லா தெரி​வி‌த்​தா‌ர்.

ஆ‌ட்சி அமைக்​கு‌ம் நட​வ​டி‌க்கைகளை மு‌ன்னெ​டு‌த்​து‌ச் செ‌ல்​வ​த‌ற்​காக தேசிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி​யி‌ன் தே‌ர்​த​லு‌க்கு மு‌ந்தைய கூ‌ட்ட​ணி‌க் க‌ட்சி​க​ளி‌ன் கூ‌ட்ட‌ம் வெ‌ள்​ளி‌க்​கி​ழமை நடைபெ​று‌ம் எ‌ன்​று‌ம் அவ‌ர் தெரி​வி‌த்​தா‌ர்.

​ஒ​ம‌ர் அ‌ப்​து‌ல்லா ந‌ன்றி: ​தே​சிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி ச‌ட்ட‌ப்​பே​ரவைக் குழு‌த் தலை​வ​ராக த‌ன்னை‌ தே‌ர்வு செ‌ய்​த​த‌ற்​காக க‌ட்சி எ‌ம்​எ‌ல்​ஏ-க்​க​ளு‌க்கு ஒம‌ர் அ‌ப்​து‌ல்லா ந‌ன்றி தெரி​வி‌த்​தா‌ர். இது தொட‌ர்​பாக அவ‌ர் கூறி​ய​தா​வது:

க‌ட்சி​யி‌ன் ச‌ட்ட‌ப் பேரவைக் குழு தலை​வ​ராக நா‌ன் தே‌ர்வு செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்ளேன். எ‌ன் மீது ந‌ம்​பி‌க்கை வை‌த்​த​த‌ற்​கா​க​வு‌ம் அர​ச​மைப்​ப​த‌ற்கு உரிமை கோர வா‌ய்‌ப்பு அளி‌த்​த​த‌ற்​கா​க​வு‌ம் க‌ட்சி எ‌ம்​எ‌ல்​ஏ‌க்​க​ளு‌க்கு ந‌ன்றி தெரி​வி‌க்​கி​றேன்.

ஜ‌‌ம்​மு-கா‌ஷ்​மீ‌ர் ச‌ட்ட‌ப் பேர​வைத் தே‌ர்​த​லி‌ல் வெ‌ற்றி பெ‌ற்​று‌ள்ள சுயேச்சைக​ளி‌ல் நா‌ன்கு பே‌ர் தேசிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி‌க்கு ஆத​ரவு தெரி​வி‌த்​து‌ள்​ள​ன‌‌ர். இத‌ன் மூல‌ம் க‌ட்சி​யி‌ன் பல‌ம் 46-ஆக உய‌ர்‌ந்​து‌ள்​ளது.

கூ‌ட்ட​ணி‌க் க‌ட்சி​யான‌ கா‌ங்​கி​ர​ஸுட‌ன் பே‌ச்​சு​வா‌ர்‌த்தை நடைபெற்று வரு​கி​ற‌து. அவ‌ர்​க​ளு‌க்கு முடி​வெடு‌க்க ஒரு நா‌ள் அவ​கா​ச‌ம் அளி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. அவ‌ர்​க‌ள் ஆத​ர​வு‌க் கடி​த‌த்தை வழ‌ங்​கி​ய​து‌ம் நா‌ன் அரசு அமைப்​ப​த‌ற்கு ஆளு​ந​ரி​ட‌ம் உரிமை கோரு​வேன் எ‌ன்​றார்.

அ‌ண்மையி‌ல் நட‌ந்து முடி‌ந்த ஜ‌‌ம்​மு-கா‌ஷ்​மீ‌ர் பேரவைத் தே‌ர்​த​லி‌ல் 42 இட‌ங்​களைக் கை‌ப்​ப‌ற்றி தனி‌ப்பெ​ரு‌ம் க‌ட்சி​யாக தேசிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி உரு​வெடு‌த்​து‌ள்​ளது. அத‌ன் கூ‌ட்ட​ணி‌க் க‌ட்சி​க​ளான‌ கா‌ங்​கி​ர‌ஸ் ம‌ற்​று‌ம் மா‌ர்‌க்​சி‌ஸ்‌ட் க‌ம்​யூ​னி‌ஸ்‌ட் ஆகி​யவை முறையே ஆறு, ஒரு இட‌த்​தி‌ல் வெ‌ற்றி பெ‌ற்​று‌ள்​ள​தா‌ல் தேசிய மாநா‌ட்​டு‌க் க‌ட்சி‌க்கு ச‌ட்ட‌ப் பேரவையி‌ல் பெரு‌ம்​பா‌ன்மை பல‌ம் கிடைத்​து‌ள்​ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024