Wednesday, September 25, 2024

சண்டை ஒருபுறம், கொண்டாட்டம் மறுபுறம் – உக்ரைனில்..!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

உக்ரைனில் ஒவ்வொரு ஆண்டும் ஆக. 24-ஆம் நாள் சுதந்திர தினம் கொண்டாப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷியா ராணுவ தாக்குதல்களை ஆரம்பித்து 914 நாள்கள் உருண்டோடிவிட்டன. சண்டை இன்னும் முடிவுக்கு வராத சூழலில், உக்ரைன் சுதந்திர தினத்தையொட்டி மக்கள் இசை திருவிழாவில் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

கீவ் நகரில் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்ற இசைத்திருவிழா

இதையொட்டி கடந்த சனிக்கிழமை(ஆக. 24), உக்ரைன் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சனி, ஞாயிறு ஆகிய இருநாள்கள் தலைநகர் கீவில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இவ்விரு நாள்களிலும் நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலும் ஆட்டம் பாட்டத்துடன் இளம் பருவ ஆண்களும், பெண்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரஷியாவின் தாக்குதல்களால் 2 ஆண்டுகளாக இசைத் திருவிழா நடைபெறாத நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பை தகர்க்கும் விதமாக, உக்ரைன் மீது ரஷியா கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. மின்சார உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் நான்கு போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024