சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவரை நக்சல்கள் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பசகுடா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புட்கேல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடந்ததாக இங்குள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதற்கட்ட தகவலின்படி, மாவோயிஸ்டுகளின் பாமேட் பகுதி குழுவால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், புட்கேலில் வசிக்கும் தினேஷ் பூஜாரியின் இடத்தில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து நக்சலைட்டுகள் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
மேலும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன், பிஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவின் தனித்தனி இடங்களில் இந்தாண்டு இதுவரை 53 பேர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.