Tuesday, September 24, 2024

சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக மன்னித்து கொள்ளுங்கள் – பிரதமர் மோடி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

“சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக மன்னித்து கொள்ளுங்கள்” – பிரதமர் மோடி“சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக மன்னித்து கொள்ளுங்கள்” - பிரதமர் மோடி

“சிந்துதுர்க்கில் உள்ள கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் சரி, எனது சகாக்களும் சரி சத்ரபதி சிவாஜி ஓர் அரசர் என்பதை தாண்டி மரியாதைக்குரியவர்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடற்படை தினத்தை ஒட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) பிற்பகல் 1 மணியளவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து விழுந்தது. இதற்கு பலத்த காற்றே காரணம் எனக் கூறப்படுகிறது.

விளம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது பல சர்ச்சைகளை கிளம்பி உள்ளது. சத்ரபதி சிவாஜி சிலையை முறையாக பராமரிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் பால்கரில், வத்வான் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் உடைந்து விழுந்த சத்ரபதி சிவாஜி சிலை குறித்து பேசினார்.

விளம்பரம்

Also Read:
பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்: ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சிந்துதுர்க்கில் உள்ள கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் சரி, எனது சகாக்களும் சரி சத்ரபதி சிவாஜி ஓர் அரசர் என்பதை தாண்டி மரியாதைக்குரியவர்.

எனவே, சத்ரபதி சிவாஜியை கடவுளாக வணங்குபவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வணக்கங்களுக்குரிய தெய்வத்தை விட எதுவும் பெரியது அல்ல” என்று கூறினார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Chhatrapati Shivaji Maharaj
,
Maharashtra
,
Modi
,
statue

You may also like

© RajTamil Network – 2024