சபரிமலையில் நேரடி முன்பதிவு மூலமாக தினமும் 10,000 பேர் அனுமதி!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் எனும் நேரடி முன்பதிவு மூலமாக தினமும் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த டிசம்பர் 26 ஆம் தேதி நடக்கிறது.

இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. நவ. 16 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்பாட் புக்கிங் எனும் நேரடி முன்பதிவு மூலமாகவும் நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பம்பை, நிலக்கல், எரிமேலி மற்றும் பீர்மேடு ஆகிய இடங்களில் சாமி தரிசனத்துக்கு பதிவு செய்துகொள்ளலாம்.

இதனால் தினசரி ஆன்லைன் முன்பதிவு 80,000 எண்ணிக்கையில் இருந்து 70,000 ஆகக் குறைக்கப்படுவதாக தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,000 பேர் என தினமும் 80,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலைக்கு வரும் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் ஸ்பாட் புக்கிங் வசதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யவில்லை எனில் நேரடியாக வந்து பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம்.

கூட்டத்தை சமாளிக்கவும் பாதுகாப்பிற்காகவும் 13,600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது' என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024