Thursday, October 31, 2024

சபரிமலை கோவில் நடை திறப்பு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நே திறக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இன்று இரவு 10 மணியளவில் கோவில் நடை சாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான பாலராம வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுவதால், நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது.

அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள்

சபரி மலை ஐயப்பன் கோயிலில் நேற்று பூஜைகள் எதுவும் நடைபெறாத நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

காலை 10 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும் என்றும், இன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக குவிந்து வருகின்றனர்.

மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024