Sunday, September 22, 2024

சமூக வலைதள ஆதரவாளர்களுக்கு கோரிக்கை வைத்த பிரதமர் மோடி…

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

Modi Ka Parivar : பாஜக சமூக வலைதள ஆதரவாளர்களுக்கு கோரிக்கை வைத்த பிரதமர் மோடி… வைரலாகும் பதிவு!பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலையொட்டி சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்ட பாஜக மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ஒன்றை எடுத்துள்ளார். இது தொடர்பான பதிவு வருகிறது வைரலாகி வருகிறது.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணிக்கு தலைமை ஏற்ற பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவுடன் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்டார்.

விளம்பரம்

அவருடன் நிர்மலா சீதாராமன், அமித் ஷா, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்றனர். முன்னதாக மக்களவைத் தேர்தலையொட்டி சமூக வலைதளங்களில் பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். பிரதமர் மோடியின் ஆதரவாளர்களாக செயல்பட்ட நெட்டிசன்கள் தங்களது ப்ரொபைல் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என பொருள்படும் மோடி கா பரிவார் (Modi Ka Parivar) என்று குறிப்பிட்டு இருந்தனர்.

தற்போது தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் மோடியின் குடும்பம் என்ற பெயரை ஆதரவாளர்கள் நீக்கி விடலாம் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, “தேர்தல் பரப்புரையின் போது, ​​இந்தியா முழுவதும் உள்ள மக்கள் என் மீதான பாசத்தின் அடையாளமாக தங்கள் சமூக ஊடக கணக்குகளில் ‘மோடியின் குடும்பம்’என்று சேர்த்தனர். இது எனக்கு மிகுந்த பலத்தை அளித்தது.

இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். இது ஒரு வகையான சாதனையாகும். மேலும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கியுள்ளனர்.

விளம்பரம்

உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து ‘மோடி கா பரிவார்’ ஐ அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் குடும்பமாக எங்களின் பந்தம் வலுவானது” என்று கூறியுள்ளார்.

Through the election campaign, people across India added 'Modi Ka Parivar' to their social media as a mark of affection towards me. I derived a lot of strength from it. The people of India have given the NDA a majority for the third consecutive time, a record of sorts, and have…

— Narendra Modi (@narendramodi) June 11, 2024

விளம்பரம்

முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலின் போது ‘நாட்டின் காவலாளி’ என பொருள்படும் சவுக்கிதார் என்ற பெயரை பிரதமர் மோடி தனது பெயருக்கு பின்னால் சமூக வலைதள கணக்குகளில் சேர்த்து இருந்தார்.

இதையும் படிங்க – 12 நாட்களில் ரூ.1225 கோடி அதிகரித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு

அவரை பின்பற்றி பாஜக மற்றும் மோடியின் ஆதரவாளர்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளின் பெயருக்கு பின்னால் சவுக்கிதார் என்பதை சேர்த்துக்கொண்டனர். இந்த சமூக வலைதள பரப்புரை பலரது கவனத்தை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது. அதே போன்று நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மோடி கா பரிவார் என்ற பரப்புரையை பாஜகவினர் வலைதளங்களில் செய்திருந்தனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
PM Modi

You may also like

© RajTamil Network – 2024