சரக்கு வாகனம் மீது லாரி மோதி 8 பக்தர்கள் பலி

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

சண்டிகார்,

அரியானா மாநிலம் குருருஷேத்ரா மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. நேற்று நள்ளிரவு அந்த சரக்கு வாகனம் ஜிந்த் மாவட்டத்தின் ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிதாரனா கிராமத்தின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி சரக்கு வாகனம் மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 2 பெண்கள், ஒரு இளம்பெண் உள்பட 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹிசாரில் உள்ள ஜிண்ட் மற்றும் அக்ரோஹாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி குல்தீப் கூறினார். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024