சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்து நந்தனம், சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் இன்று (16.08.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உழவர் நலத்துறை அமைச்சர் நடப்பு 2023-24 அரவைப் பருவத்தின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்வரும் 2024-25 அரவைப் பருவத்திற்கான கரும்பு உற்பத்தி சுத்திகரிப்பு பணிகள் இணைமின் உற்பத்தி திட்ட செயல்பாடுகள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து கரும்பு உற்பத்தியை பெருக்குவதற்கும், ஆலை செயல்பாடுகளை மேம்படுத்தவும் உரிய அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், சர்க்கரைத்துறை இயக்குநர், சர்க்கரைத்துறை கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சர்க்கரைக்கழக பொது மேலாளர், சர்க்கரைத்துறை உயர் அலுவலர்கள், மற்றும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024