Saturday, September 21, 2024

சர்வதேச டி20 கிரிக்கெட்; சாதனை பட்டியலில் இடம் பிடித்த நவீன் உல் ஹக்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டிரினிடாடில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன்கள் அடித்தார்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 2 விக்கெட்டுகள் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நவீன் உல் ஹக் படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் ரஷித் கான் (144 விக்கெட்) முதல் இடத்திலும், முகமது நபி (95 விக்கெட்) 2ம் இடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் (59 விக்கெட்) 3வது இடத்திலும், நவீன் உல் ஹக் (50 விக்கெட்) 4ம் இடத்திலும் உள்ளனர்.

சர்வதேச டி20 கிரிகெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்:

ரஷித் கான் – 144 விக்கெட்

முகமது நபி – 95 விக்கெட்

முஜீப் உர் ரஹ்மான் – 59 விக்கெட்

நவீன் உல் ஹ்க் – 50 விக்கெட்

You may also like

© RajTamil Network – 2024