Friday, September 20, 2024

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை

by rajtamil
0 comment 30 views
A+A-
Reset

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், மொத்தம் 104 போட்டிகளில் விளையாடி 3,155 ரன்களை குவித்திருக்கிறார்.

பார்படாஸ்,

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரன் பிஞ்ச் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 3,120 ரன்களை எடுத்திருக்கிறார்.

இதனை வார்னர் முறியடித்து இருக்கிறார். ஓமன் அணிக்கு எதிரான போட்டியின்போது, அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார். ஓமன் சுழற்பந்து வீச்சாளர்களின் அச்சுறுத்தலை பொறுமையாக எதிர்கொண்ட அவர், இந்த சாதனையை படைப்பதற்காக அதிகம் ரிஸ்க் எடுக்கவில்லை.

போட்டியில், 56 ரன்கள் (51 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்த வார்னர், மொத்தம் 104 போட்டிகளில் விளையாடி 3,155 ரன்களை குவித்திருக்கிறார். வார்னர், 34.28 பேட்டிங் சராசரி வைத்திருப்பதுடன், 142.53 ஸ்டிரைக் ரேட்டும் வைத்திருக்கிறார்.

இந்த போட்டியில், வார்னர் மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார். அவர், 27-வது அரை சதம் அடித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

கெயில் 110 அரை சதம் அடித்திருக்கிறார். வார்னர் மொத்தம் 111 அரை சதம் எடுத்திருக்கிறார். இதேபோன்று, இந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இவர்களை நெருங்கும் வகையில், 105 அரை சதம் எடுத்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024