Sunday, September 22, 2024

சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு; ரோகன் போபண்ணா அறிவிப்பு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

ரோகன் போபண்ணா 2002-ம் ஆண்டில், தன்னுடைய 22 வயதில் விளையாட தொடங்கி ஏறக்குறைய இரு தசாப்தங்களாக இந்தியாவுக்காக ஆடியுள்ளார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த 44 வயதுடைய ரோகன் போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி இணை, பிரான்சின் எட்வர்டு ரோஜர்-வாஸ்லின் மற்றும் கெயில் மோன்பில்ஸ் இணையை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியில், பிரான்ஸ் இணை வெற்றி பெற்றது. போபண்ணா இணை அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ரோகன் போபண்ணா இன்று அறிவித்து உள்ளார்.

டேவிஸ் கோப்பை போட்டிகளில் விளையாடுவதில் இருந்து முன்பே ஓய்வு அறிவித்த நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதனால், 2026-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார்.

அவர், 2002-ம் ஆண்டில், தன்னுடைய 22 வயதில் விளையாட தொடங்கி ஏறக்குறைய இரு தசாப்தங்களாக இந்தியாவுக்காக ஆடியுள்ளார்.

2016-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில், சானியா மிர்சாவுடன் சேர்ந்து போபண்ணா விளையாடினார். இந்த இணை பதக்கம் வெல்லும் முனைப்பில் ஏறக்குறைய வெற்றியை அடைய போகும் தருணத்தில் தோல்வியை தழுவியது. இதனால், 4-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

You may also like

© RajTamil Network – 2024