Saturday, September 28, 2024

சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனலை மூட நீதிபதி உத்தரவு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனலை மூட நீதிபதி உத்தரவு

சென்னை: சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை மூட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கைதான சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கரின் நேர்காணலை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பியதாக அந்த சேனலின் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுவையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு தொடர்ந்திருந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பாக விசாரணைக்கு வந்தது.

நிபந்தனை ஜாமீன்: ஃபெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், தனது பேச்சுக்கான விளைவை மனுதாரர் தற்போது உணர்ந்துவிட்டதாகவும், இனி ஒருபோதும் அவ்வாறு பேச மாட்டார் என்றும் உறுதியளித்தார்.

அதையடுத்து, ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் யூடியூப்சேனலை மூட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொள்ளமாட்டேன் எனவிசாரணை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்த நீதிபதி, மனுதாரரான ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்,

You may also like

© RajTamil Network – 2024