சாலை வசதியின்மையால் பழங்குடியினப் பெண் பலி!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சாலை வசதியின்மையால் பழங்குடியினப் பெண் பலி!மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்ல சாலை வசதியில்லாததால் பழங்குடியினப் பெண் பலி

ஜார்க்கண்டில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் சாலை வசதியில்லாததால் பழங்குடியினப் பெண் உயிரிழந்துள்ளார்.

ஜார்க்கண்டின் மஹுவாதந்த் பகுதியில் வசித்து வந்த பழங்குடியின பெண்ணான சாந்தி குஜ்ஜூர் என்பவருக்கு இன்று (ஜூலை 15) காலையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், அப்பகுதியில் சாலை வசதியில்லாததால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரவியலாத நிலையில் இருந்துள்ளது. இதனால் சாந்தியின் உறவினர்கள், அவரை கயிற்றுக் கட்டிலில் தூக்கிக் கொண்டு, 4 கி.மீ. தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சாந்தியை அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சாலை வசதி சீராக இருந்திருந்தால் சாந்தியின் உயிரிழந்திருக்க மாட்டார் என்று சாந்தியின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் வேதனை தெரிவித்தனர். சாலை வசதி அமைத்துத் தரக்கோரி, பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறினர்.

இதனையடுத்து, இந்த சம்பவத்தினை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர், விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தருவதாகக் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024