Saturday, September 21, 2024

சிங்கப்பூர் பிரதமருடன் மோடி சந்திப்பு: ஒப்பந்தங்கள் கையொப்பம்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை சந்தித்தார்.

புரூனே நாட்டுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு, சிங்கப்பூர் பிரதமரின் அழைப்பை ஏற்றி, அந்த நாட்டுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு புதன்கிழமை மாலை சென்றடைந்த பிரதமர் மோடியை அந்த நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சரும் தமிழ் வம்சாவளியுமான கே. சண்முகம் நேரில் சென்று வரவேற்றார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று விருந்தளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

கோட் டிக்கெட் விலை ரூ. 2,000?

முதல் பயணம்

சிங்கப்பூருக்கு 2018-க்கு பிறகு ஐந்தாவது முறையாக பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல்முறையாக சென்றுள்ளார்.

முன்னதாக, 3-வது முறையாக பதவியேற்ற பிறகு ரஷியா, உக்ரைன், புரூனே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024