சித்தார்த் – 40 படத்துக்கு இசையமைக்கும் பாம்பே ஜெயஸ்ரீ மகன்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சித்தார்த் – 40 படத்தின் இசையமைப்பாளர் அறிவிக்கபட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமல்ஹாசனுடன் இந்தியன் – 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், கடும் விமர்சனங்களே கிடைத்தன. அடுத்ததாக, சித்தார்த் நடிப்பில் ‘மிஸ் யூ’ என்கிற படம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

இதையும் படிக்க: சூர்யா – ஆர். ஜே. பாலாஜி படம் அறிவிப்பு!

இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

Elated to welcome @amritramnath23 as a Music Composer for our #Siddharth40#Siddharth@sri_sriganesh89@iamarunviswa@realsarathkumar#Devayani@[email protected]/V0NahJNae3

— Shanthi Talkies (@ShanthiTalkies) October 14, 2024

இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அம்ரித் மலையாளத்தில் வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சித்தார்த் – 40 படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024