Saturday, September 21, 2024

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

சின்சினாட்டி ஓபன் டென்னிசில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), பிரான்ஸ் வீராங்கனை வர்வரா கிராசெவா உடன் மோதினார்.

2 மணி 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக், 6-0, 6-7 (8-10), 6-2 என்ற செட் கணக்கில் வர்வரா கிராசெவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் 3-வது சுற்றில் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்ட்யுக்குடன் மோதுகிறார்.

You may also like

© RajTamil Network – 2024