Monday, September 23, 2024

சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை கவிழ்க்க சதி!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ரயில் தண்டவாளத்தில் தலா 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை தடம்புரள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிமெண்ட் துண்டுகள் மீது சரக்கு ரயில் மோதி நிலையிலும், எந்தவித சேதமுமின்றி ரயில் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே சட்டம் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தலை தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

brick
சிமெண்ட் துண்டுகள்.

உ.பி.யில் விரைவு ரயிலை கவிழ்க்க சதி: என்ஐஏ விசாரணை

இந்த சம்பவம் ஃபுலேரா-அகமதாபாத் வழித்தடத்தில் சாரத்னா மற்றும் பங்காத் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

முதலில் ரயில்வே தண்டாளத்தில் சிமெண்ட் துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, சிமெண்ட் துண்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

இந்த ரயில் கவிழ்ப்பு சதி தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஆகியவை வைக்கப்பட்டு, காளிந்தி விரைவு ரயிலைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024