Friday, September 20, 2024

சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிய நடிகர் சங்கம்

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

நடிகர் வெங்கல் ராவின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். கந்தசாமி, தலைநகரம், சீனா தானா 007, எலி உள்ளிட்ட பல படங்களில் வெங்கல் ராவின் காமெடிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபகாலமாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. தற்போது வெங்கல் ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயல் இழந்துள்ளது.

ஒரு கை, ஒரு கால் செயலிழந்து வீட்டில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி சினிமா தொழிலாளர்கள் தனக்கு உதவ வேண்டுமென்று வீடியோ வெளியிட்டு இருந்தார் வெங்கல் ராவ். அதனைத்தொடர்ந்து நடிகர் வெங்கல் ராவின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார்.

இதையடுத்து வெங்கல் ராவிடம், நடிகர் சங்கம் சார்பில் அதன் துணைத் தலைவர் பூச்சி முருகன் தொடர்பு கொண்டு பேசி மருத்துவ உதவிகளுக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்யும் என்று உறுதி அளித்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நடிகர் சங்கம் சார்பில் வெங்கல்ராவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. நடிகர் பாலாவும் வெங்கல்ராவுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024