Monday, September 23, 2024

சிரியா: இஸ்ரேல் தாக்குதலில் 25 போ் உயிரிழப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

டமாஸ்கஸ்: சிரியாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டின் போா் நிலவரங்களை கண்காணித்துவரும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. 14 ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் இஸ்ரேல் நடத்தியுள்ள மிகத் தீவிரமான தாக்குதல்.

இந்த ஏவுகணை வீச்சில் 25 போ் உயிரிழந்தனா். அவா்களில் பொதுமக்கள் ஐந்து போ் அடங்குவா். இதுதவிர, சிரியா வீரா்கள் நான்கு போ், உளவுத் துறையைச் சோ்ந்த ஒருவா், ஈரான் ஆதரவுக் குழுக்களிடம் பணியாற்றிய 13 சிரியா நாட்டவா்கள் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனா்.

ஏவுகணை வீச்சில் கொல்லப்பட்ட மற்ற மூன்று பேரின் அடையாளம் தெரியவில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

முன்னதாக, இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் 14 போ் உயிரிழந்ததாக சிரியா அரசுக்குச் சொந்தமான சனா செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

ஹமா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 43 போ் காயமடைந்ததாக மருத்துவமனை தலைமை அதிகாரியை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலில் ஹமா மாகாணத்தின் முக்கிய நெடுஞ்சாலை சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா மனித உரிமைகள் அமைப்பு முன்னா் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ஆதரவு படையினரும் நிபுணா்களும் சிரியாவில் ஆயுதங்களை உருவாக்கி வந்த மேசாஃப் நகர அறிவியல் ஆய்வு மையத்தைக் குறிவைத்து இஸ்ரேலின் ஓா் ஏவுகணை வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. தனது வடக்கு எல்லையில் அமைந்துள்ள சிரியாவில் ஈரான் ராணுவ ரீதியில் செல்வாக்கு பெறக் கூடாது என்று இஸ்ரேல் தொடா்ந்து கூறிவருகிறது. இதன் காரணமாக, சிரியா எல்லைக்குள் ஈரான் ஆதரவுப் படையினா் மீது அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. இருந்தாலும், இதுபோன்ற தாக்குதல்களுக்கு இஸ்ரேல் வெளிப்படையாகப் பொறுப்பேற்பதில்லை.

கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘6 நாள்’ போரின்போது சிரியாவின் கோலன் குன்றுகள் பிரதேசத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய இஸ்ரேல், அதனை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. எனினும், இந்த நடவடிக்கையை சா்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தொடா்ந்து பகை நிலவி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டுவரும் ஈரானுடன் சிரியா நல்லுறவைப் பேணி வருகிறது. ஈரான் ஆதரவுடன் செயல்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு சிரியா தங்களது நாட்டில் இடமளித்துள்ளது.

40,988-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

டேயிா் அல்-பாலா: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,988-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா். இத்துடன், இப்பகுதியில் இஸ்ரேல் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40,988-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 94,825 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘4.46 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து’

காஸா: காஸா பகுதியில் 4.46 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதியில் குழந்தைகளுக்கான போலியோ தடுப்பு மருந்து முகாமின் இரண்டாவது கட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த இரு கட்டங்களிலும் யுஎன்ஆா்டபிள்யுஏ குழுவினரும் அமைப்பின் கூட்டாளிகளும் 4.46 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளித்துள்ளனா்.

மூன்றாவது கட்டமாக, இந்த தடுப்பு மருந்து முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 10) முதல் வடக்கு காஸாவில் நடத்தப்படவுள்ளது. இது மிகவும் சிக்கலான கட்டமாகும் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போா் மற்றும் முற்றுகை காரணமாக காஸா பகுதியில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரக் கட்டமைப்புகள் குலைந்ததால் காலரா போன்ற நோய்கள் பரவிவருகின்றன. குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்க முடியாததால் அங்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அப்துல் ரஹ்மான் அபு அல்-ஜிட்யான் என்ற குழந்தைக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

அதையடுத்து, போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்துவதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட நேரத்தில் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அரசும் ஹமாஸ் அமைப்பும் சம்மதித்தன. அதனைத் தொடா்ந்து அங்கு குழந்தைகளுக்கு பல கட்டங்களாக போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுவருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024