Friday, September 20, 2024

சிரி… சிரி…

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

சிரி… சிரி…புலவரை வெளியே போகச் சொன்ன மன்னர்: காரணம் என்ன?சிரி... சிரி...

ங்கே பதுங்கியிருந்தாலும் அதைக்

கண்டுபிடிக்க புதிய "ஆப்' ஒன்று

வந்துள்ளதாம் மன்னா…?''

'ஆப்பு வைப்பதற்கென்றே ஒரு ஆப்பா…''



'மன்னர் யாருக்கு அஞ்சுவார்.. ராணிக்கா? எதிரிக்கா?''

'புலவரை விட்டு விட்டீர்களே..''



'அந்தச் சாமியார் முழித்தவுடன் ஜெபமாலையை உருட்டுகிறாரே..?''

'ஆம் அரசே.. மாலையில் உள்ள தங்க முத்துகள் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்…''



'அமைச்சரே.. உங்க காதில் மூதாட்டி வந்து ஏதோதோ சொல்லிட்டு போகிறாரே.. அவர் யார்..''

'மன்னா.. அது என்னோட மாமியார்தான்…''

–வி.ரேவதி, தஞ்சாவூர்.

'மாத்தி யோசிச்ச புலவரை அரண்மனையைவிட்டு வெளியே போகச் சொல்லிட்டாரே மன்னர். எதற்காம்?''

'இதுவரை மன்னரை புகழ்ந்த புலவர், மாற்றத்துக்காக மகாராணியை புகழ்ந்து பாடினாராம்.''

-எம்.சுப்பையா, கோவை.

'அமைச்சரே.. தூது சென்ற அரண்மனைப் புறா பாதியிலேயே திரும்பி வந்துவிட்டதே! ஏன்?''

'மன்னிக்க வேண்டும் மன்னா.. தூது ஓலையை புறாவின் காலில் கட்ட மறந்துவிட்டேன்…''

-கே.ராமநாதன், மதுரை.

'புலவரே.. பரிசை வாங்கி சேடிப் பெண்ணிடம் ஏன் கொடுத்தீர்..?''

'கடந்த முறை பரிசு கிடைக்காதபோது, கடன் வாங்கினேன் மன்னா..''

-அ.ரியாஸ், சேலம்.

'மன்னா.. வாள், கேடயத்தை எல்லாம் கழற்றி வைத்துவிடுங்கள்..''

'ஏன் அமைச்சரே..''

'எதிரி நம் நாட்டுக்கு விருந்தாளியாக வருகிறானாம்…''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'பாடி முடித்த புலவர் சன்மானத்தைக் கேட்காமல் போகிறாரே அமைச்சரே..''

'தாங்கள் அணிந்திருந்த கவரிங் நகைகளைப் பார்த்ததும் கஜானா காலி என்பதை புரிந்துகொண்டுவிட்டார் மன்னா?''

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'அவர்தான் நம் மன்னர் உயிரைக் காப்பாற்றினார்…''

'அரண்மனை வைத்தியரா?''

'இல்லை.. பதுங்குக் குழி வெட்டுற ஆள்..''

-வி.சாரதி டேச்சு, சென்னை-5.

'அமைச்சரே… இந்த சமையல்காரர் ஏன் ஆடிக்கொண்டே சமைக்கிறார்..?''

'மன்னா.. அவருடைய பெயர் "ஆடியபாதம்' என்பதால்தான்…''

-அ.செந்தில்குமார், சூலூர்.

'அமைச்சரே.. இது என்ன புலி ஜோதிடம்…''

'மன்னரே.. எதிரே உள்ள புலி படத்துக்கு முன்பு சோழி உருட்டி ஜோதிடம் கூறுவார் அவர் அதனால்தான்…''

-மஞ்சுதேவன், பெங்களூரு.

You may also like

© RajTamil Network – 2024