Tuesday, September 24, 2024

சிறப்பு பாதுகாப்புப் படைக்கு நன்றி- டிரம்ப்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சிறப்பு பாதுகாப்புப் படைக்கு நன்றி- டிரம்ப்துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது சிறப்பாக செயலாற்றி என்னை பாதுகாத்த சிறப்பு பாதுகாப்பு படைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்ப்

வருகிற நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் இன்று (ஜூலை 14) காலையில் தேர்தல் பிரசாரம் நடத்தினார். அப்போது டொனால்ட் டிரம்ப் மீது, 20 வயது இளைஞரான தாமஸ் மேத்யூ, அந்தப் பகுதியில் இருந்த ஒரு கூரையின் மீது இருந்தவாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் டிரம்ப்பின் வலது காதின் மேற்புறத்தில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தாமஸை டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து, டிரம்ப் உடனடியாக அந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், இந்த சம்பவத்தில் டிரம்ப்பின் ஆதரவாளர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் உலகளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது சிறப்பாக செயலாற்றி என்னை பாதுகாத்த சிறப்பு பாதுகாப்பு படைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் விரைவான பதிலடி கொடுத்தசிறப்பு பாதுகாப்பு படைக்கும், அமலாக்கப்பிரிவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் பேரணியில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த மற்றொருவரின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற செயல் நம் நாட்டில் நடப்பது நம்பமுடியாதது. துப்பாக்கி குண்டு எனது வலது காதில் பட்டு சதையைக் கிழத்ததில் காயம் ஏற்பட்டது. காயம்பட்ட இடத்தில் ரத்தம் வடியவே நடந்ததை உணர்ந்து கொண்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024