Saturday, September 21, 2024

சிறுமியின் உள்ளாடையை கழற்றி நிர்வாணப்படுத்துவது பலாத்கார முயற்சி அல்ல

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

சிறுமியின் உள்ளாடையை கழற்றி நிர்வாணப்படுத்துவது பலாத்கார முயற்சி அல்ல – உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சைசிறுமியின் உள்ளாடையை கழற்றி நிர்வாணப்படுத்துவது பலாத்கார முயற்சி அல்ல - உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் சுவாலால், கடந்த 1991ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது பெண் குழந்தையை இரவு 8 மணியளவில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியின் ஆடை மற்றும் உள்ளாடைகளை வலுக்கட்டாயமாக கழற்றி நிர்வாணப்படுத்தியதால், அந்த சிறுமி கத்தி கூச்சல் எழுப்பியதால், கிராம மக்கள் ஓடி வந்தனர்.

அதைப் பார்த்த சுவாலால் அங்கிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், இது தொடர்பான வழக்கில் சுவாலால் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக, டோங்க் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, சுவாலால் இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப்குமார், 33 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தீர்ப்பளித்தார்.

விளம்பரம்
கர்ப்பிணிப் பெண்கள் இனி வீட்டில் இருந்தே ₹18000 நிதியுதவி பெறலாம்…
மேலும் செய்திகள்…

அதில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தியது பாலியல் வன்கொடுமை முயற்சி இல்லை என்றும், அது பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் குற்றம் என்றும் தெரிவித்தார். ஏனெனில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி, முற்றிலும் நிர்வாணப்படுத்துவது பலாத்கார முயற்சி தொடர்பான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 மற்றும் பிரிவு 511ன் கீழ் வராது என்ற நீதிபதி, பாலியல் வன்கொடுமை முயற்சி என்றால், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆடைகளை கழற்றியதையும் தாண்டி சென்றிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவ்வாறு எந்த நடவடிக்கையும் இந்த வழக்கில் இல்லாததால், இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின் கீழ், ஒரு பெண்ணின் நாகரீகத்தை மீறுதல் என்ற குற்றத்தின் அடிப்படையில் தான் தண்டனை வழங்க முடியும் என்று கூறியதோடு, குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்பான வழக்குகளை ரத்து செய்து, மானபங்க செயலுக்கான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பளித்தார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Rajasthan

You may also like

© RajTamil Network – 2024