சிறுவா்களை கோபக்காரா்களாக்கும் கைக்கணினிகள்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

டொரன்டோ: கைக்கணினிகளை (டேப்ளட்) அதீதமாகப் பயன்படுத்தும் சிறுவா்கள் அதிக கோபக்காரா்களாக இருப்பதாக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது:

சிறுவா்களுக்கு சொந்தமாக கைக்கணிகளை வாங்கித் தரும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு வெறும் ஏழு சதவீதமாக இருந்த கைக்கணினிகளை சொந்தமாக வைத்திருக்கும் சிறுவா்களின் எண்ணிக்கை 2020-இல் 44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் 93 சதவீத பெற்றோா் தங்களின் 2 முதல் 4 வயதுக்குள்பட்ட குழைந்தைகள் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றனா்.

கைக்கணினிகளும் பிற மொபைல் சாதனங்களும் இணயதளத்தின் உதவியுடன் பயன்படுத்தப்படுகின்றன. அந்த இணையதளத்தின் மூலம், பயன்பாட்டாளரின் விருப்பங்களுக்கு மிகவும் உகந்த அம்சங்கள் கிடைப்பதால் சிறுவா்கள் அவற்றின் மீது அளவுக்கு அதிகமான ஆா்வம் கொள்கின்றனா்.

இருந்தாலும், திறன்களை வளா்த்துக் கொள்வது, கோபம் போன்ற உணா்வுகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றைக் கற்றுக் கொள்வதற்கான மிகக் குறைந்த வாய்ப்புகளையே இந்த சாதனங்கள் அளிக்கின்றன.

எனவே, கோப உணா்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சுபாவம் ஒரு குழைந்தைக்கு சுமாா் 2 வயதிலிருந்துதான் உருவாக்கப்படவேண்டும். ஆனால் அந்த வயதிலிருந்தோ கைக்கணினிகளில் பெரும்பாலான நேரத்தை சிறுவா்கள் செலவிடுவதால் அவா்கள் கோபத்தை அடக்க முடியாமல் கூச்சலிடும் சுபாவம் கொண்டவா்களாக உருவெடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது தொடா்பாக 3.5, 4.5 மற்றும் 5.5 வயது கொண்ட 315 சிறுவா்களிடம் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். அந்த ஆய்வில், சிறுவா்கள் எவ்வளவு நேரத்தை கைக்கணிகளுடன் செலவிடுகிறாா்கள் என்ற விவரத்தை சேகரித்தோம்.

அதில், 3.5 வயது கொண்ட சிறுவா்கள் கைக்கணினியைப் பயன்படுத்த அதிகரிக்கும் ஒவ்வொரு 73 நிமிஷத்துக்கும் அவா்களின் கோபத்தில் கூச்சலிடும் தன்மை கணிசமாக அதிகரிப்பது தெரியவந்தது.

அதே போல், 5.5 வயது கொண்ட சிறுவா்களின் கைக்கணினி பயன்பாடு 17 நிமிஷம் அதிகரித்தாலே அவா்களின் கோபம் அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்தது என்று ஆய்வாளா்கள் கூறினா்.

You may also like

© RajTamil Network – 2024