Tuesday, September 24, 2024

சிறையில் 2 கிலோ எடை குறைந்தார் அரவிந்த் கேஜரிவால்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

சிறையில் 2 கிலோ எடை குறைந்தார் அரவிந்த் கேஜரிவால்!சிறையில் கேஜரிவாலின் எடை 2 கிலோ மட்டுமே குறைந்துள்ளதாக திகார் சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.அரவிந்த் கேஜரிவால்(கோப்புப் படம்)அரவிந்த் கேஜரிவால்(கோப்புப் படம்)

கேஜரிவாலின் உடல் எடை குறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திகார் சிறை நிர்வாகம் இதுதொடர்பாக தில்லி அரசின் உள்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இது போன்ற ஒரு கதை பொதுமக்களைக் குழப்புவதோடு தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிறையில் கேஜரிவால் 2 கிலோ மட்டுமே எடை குறைத்துள்ளதாகவும், அவர் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், இதன் மூலம் கேஜரிவால் உடல் எடை குறைந்திருப்பதை திகார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை விசாரித்து வரும் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் முதல்வா் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், ஊழல் வழக்கில் அவரை சிபிஐ கைது செய்துள்ளதால், அவருடைய சிறைவாசம் தொடா்கிறது.

இதனிடையே தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்க்கையுடன் பாஜகவும், அதன் தலைமையிலான மத்திய அரசும் விளையாடி வருவதாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டி உள்ளார். அதில், முதல்வா் கேஜரிவாலை சட்டவிரோத பணப்பரிவா்தனை வழக்கில் அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. அப்போது அவரது உடல் எடை 70 கிலோவாக இருந்தது. தற்போது அவரது உடல் எடை 61.5 கிலோவாகவும், ரத்தத்தில் சா்க்கரை அளவு ஐந்து மடங்கு குறைந்துள்ளது.

சிறையில் அவருக்குத் தொடா்ச்சியாக பரிசோதனைகள் நடைபெறாததால் இதற்கான காரணம் தெரியவில்லை என்றார். அதேபோல் கேஜரிவாலின் உடல்நிலைக்கு ‘கடுமையான’ ஆபத்து இருப்பதாக ஆம் ஆத்மியின் தலைவரும் தில்லி அமைச்சருமான அதிஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கடுமையான நீரிழிவு நோயாளியான கேஜரிவாலின் சா்க்கரை அளவு அபாயகரமாக குறைந்துள்ளது. பொய் வழக்கில் கேஜரிவாலை சிறையில் அடைக்க பாஜக சதி செய்துள்ளது. அவரது உடல்நிலைக்கு கடுமையான ஆபத்து உள்ளது.

அவரது உடல் எடை 8.5 கிலோ குறைந்துள்ளது, அவரது சா்க்கரை அளவு ஐந்து முறை 50-க்கும் கீழ் குறைந்துள்ளது. இது நீரிழிவு நோயாளிக்கு ஒரு மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். கேஜரிவாலுக்கு பக்கவாதம் ஏற்பட்டால், மூளை பாதிப்பு மற்றும் நிரந்தர சேதம் ஏற்பட்டால், யாா் பொறுப்பு ஆவாா் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024