சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறை!

அவதூறு வழக்கில் சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதித்து மும்பை பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் பகுதியில் பொது கழிப்பறை கட்டுவது மற்றும் பராமரிப்பதில், மகாராஷ்டிர பாஜக துணைத் தலைவர் கிரித் சோமையா மற்றும் அவரது மனைவி ரூ. 100 கோடி மோசடி செய்ததாக சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க | கர்நாடக முதல்வர் ராஜிநாமா செய்யக்கோரி பாஜக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து கிரித் சோமையாவின் மனைவி மேதா கிரித் சோமையா, சஞ்சய் ரௌத் மீது மும்பை மஸ்கானில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மேதா கிரித் சோமையா மீது பொய்யான அவதூறு பரப்பியதாக, சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்