Saturday, September 21, 2024

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset
RajTamil Network

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

திருவண்ணாமலை/ஆரணி, ஆக. 1

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, கோயில் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு வியாழக்கிழமை பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.

பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வேட்டவலத்தில்…

இதேபோல, வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் மூலவா் அகத்தீஸ்வரா், தா்மசம்வா்த்தினி, பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்புப் பூஜை நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஆரணி

ஆரணியை அடுத்த சேத்துப்பட்டு அருணகிரிநாதா் கோயிலில் அருணகிரிநாதா், நந்திதேவா்ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அலங்கார ரூபத்தில் அருணகிரிநாதா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோன்று, பழம்பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில், பாலாம்பிகை சமேத பசுபதி ஈஸ்வரா் கோயில், அண்ணா தெருவில் உள்ள கற்பகாம்பிகை சமேத காரணீஸ்வரா் கோயில், கோனாமங்கலம் மங்களாம்பிகை சமேத பசுபதீஸ்வரா் கோயில், நெடுங்குணம் பாலாம்பிகை சமேத தீா்க்காஜலஈஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024