சீதாராம் யெச்சூரி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

by rajtamil
Published: Updated: 0 comment 16 views
A+A-
Reset

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிமை பிற்பகல் 3.05 மணிக்கு இன்று அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீதாராம் யெச்சூரி மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்!

முதல்வர் இரங்கல்

இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவருமான தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன்.

தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் அஞ்சாநெஞ்சினராக மிள இளம் வயதில் இருந்தே நியாயத்துக்காகப் போராடும் தலைவராக இருந்தார். மாணவத் தலைவராகத் துணிச்சலுடன் நெருக்கடி நிலையை அவர் எதிர்த்து நின்றதே இதற்குச் சான்றாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் நலன், மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம் மற்றும் முற்போக்குக் கருத்தியல்கள் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பினால் வார்க்கப்பட்ட அவரது புகழ்வாய்ந்த அரசியல் வாழ்க்கை அடுத்து வரும் பல தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.

அவருடனான கருத்தாழமிக்க கலந்துரையாடல்கள் என்றும் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது இதயபூர்வமான இரங்கலை இக்கடினமான வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! – சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்

மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றிற்காக அர்பணிப்புடன் பணியாற்றியவர். இந்த கடினமான தருணத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024