Monday, September 23, 2024

சீனாவில் அதானி முதலீடு: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் -காங். கண்டனம்!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

சீனாவில் அதானி குழுமம் தொழில் முதலீடு செய்வதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் சீனாவில் கிளை நிறுவனம் மூலம் தொழில் தொடங்க ஆயத்தமாகியுள்ளது. இதுதொடர்பாக, அதானி எண்டர்பிரைசஸ் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அதானி எனர்ஜி ரிசோர்சஸ்(ஷாங்காய்) கோ – ‘ஏயிஆர்சிஎல்’ நிறுவனம், சீனாவின் ஷாங்காயில் தொழில் திட்டங்களுக்கான மேலாண்மை சேவைகளை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டு, கடந்த செப். 2-இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியிருப்பதவது,

பிரதமர் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில், சீனா குறித்து தெரிவித்துள்ள கருத்து – இதுவரை இந்திய பிரதமர்கள் எவரும் தெரிவிக்காத மிக அபாயகரமான கருத்தாக அமைந்துள்ளது.

பிரதமர் கூறியிருப்பது வெளிப்படையான பொய். அவரது பேச்சின் வெளிப்பாடு, இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டது. சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகள், முதலீடுகள் மற்றும் குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து கண்டுகொள்ளாமல் அரசு இருப்பதை பிரதமரின் கருத்து வெளிக்காட்டுகிறது.

உலககெங்கிலும் பல நாடுகள், சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், இந்திய எல்லைகளிலும், இந்திய எல்லைகளுக்குள்ளும் சீன வீரர்கள் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது.

இந்தியாவில் சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகள் அதிகரித்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், சீனாவிலிருந்து வரும் பணியாளர்களுக்கு இந்திய அரசு ’ஃபாஸ்ட்-ட்ராக்’ முறையில் விரைந்து விசா வாங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீன முதலீடுகளையும் ஆதரித்து வருகிறது.

அதானி குழுமம் சீனாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதன் மூலம் சீனாவுக்கான ஆதரவுக் கடிதமாக இந்த செயல்பாடு மாறியுள்ளது.அதானி நேரடியாக சீனாவில் முதலீடு செய்யும் முன்பே, அரசு செயலற்று இருக்கிறது.

சீனாவிலும், கிழக்கு ஆசியாவிலும் அதானி குழுமத்தின் முந்தைய கால செயல்பாடுகள் வலுத்த சந்தேகத்தை எழுப்புகின்றன.

அதானி குழுமத்துக்கு சொந்தமான பல நிறுவனங்களில், தைவானை சேர்ந்த தொழிலதிபர் ’சாங் சங்க்-லிங்’ இயக்குநராக செயல்பட்டுள்ளார். 2017-இல், அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான கப்பல் ஒன்று, வட கொரியாவுக்கு எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிடிபட்டது. இந்த கப்பலுக்கு ஷாங்காயில் உள்ள ’அதானி குழுமக் கப்பல் நிறுவனம்’ நிதியுதவி அளித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

’ஷாங்காய் அதானி கப்பல் நிறுவனம்’, ’அதானி குளோபல்’ மற்றும் சங்க்-லிக்குக்கு சொந்தமான பிற நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ள மேற்கண்ட எந்தவொரு நிறுவனமும், அதானி குழுமத்தின் கிளை நிறுவனங்களாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக அதானியின் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஜார்க்கண்ட்டில் உள்ள அதானி நிலக்கரி ஆலையிலிருந்து, வங்கதேச அரசு மின்சாரம் உற்பத்தி செய்திட ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் மையக் கருவாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் மட்டுமல்லாமல் இலங்கை, கென்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதானி குழுமம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்கு தீங்கிழைக்கும் வகையில் அமைந்துள்ளன.

அதானியுடனான பிரதமர் மோடியின் நட்புறவு இப்போது உலகளவில் நன்கு அறியப்பட்டதொரு விஷயமாக உள்ளது.அதானி குழுமத்தின் வணிக லாபத்தை நோக்கி வகுக்கப்பட்டுள்ள இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், உலக அரங்கில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

வெளியுறவுக் கொள்கைகள் மட்டுமல்லாமல், ’மோதானி(மோடி-அதானி கூட்டணியின்)’ வெளிநாட்டு முதலீடுகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. பிரதமரின் சிறப்பு வாய்ந்த இந்த நட்பால், உள்நாட்டிலும், உலகளவிலும், இந்தியா ஏற்கெனவே பல தியாகங்களை செய்துவிட்டது. சீன விவகாரத்தில் அரசின் கொள்கை உருவாக்கம் போதுமானதாக இல்லை.

சீனாவில், மோதானியின் முதலீடுகளால் இந்தியா செய்துள்ள தியாகங்கள் பட்டியலில் தேசப் பாதுகாப்பும் இறையாண்மையும் இணைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

नरेंद्र मोदी का चीन को क्लीन चिट देने वाला बयान, किसी भारतीय प्रधानमंत्री के सबसे नुकसानदेह बयानों में से एक था।
यह सफेद झूठ था, जिसने चीन के सामने हमारा स्टैंड कमजोर किया। उसके बाद से अनियंत्रित आयात और निवेश के प्रति सरकार की लापरवाही भी सामने आई।
अब अडानी ग्रुप के चीन में… pic.twitter.com/rSuCqd0J7k

— Congress (@INCIndia) September 10, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024