Friday, September 20, 2024

சீனாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: 47 பேர் பலி

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

சீனாவின் தெற்கு பகுதியில் மழை-வெள்ளத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

பீஜிங்:

சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்கிறது. பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு, மண் சரிவுகள் ஏற்படுகின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குவாங்டாங் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி இதுவரை 47 பேர் பலியானதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சீனாவின் தெற்கு பகுதியில் இவ்வாறு மழை-வெள்ளத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி மற்றும் அதிகபட்ச வெப்ப அலை வீசுகிறது. இத்தகைய தீவிர வானிலையுடன் அரசு போராடி வருகிறது. மக்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024