சீனா ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னரை ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் வீழ்த்தி பட்டம் வென்றார்.

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னா் – ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் இன்று மோதினார்கள்.

முதல் செட்டில் சின்னர் 7(6)-6 வெற்றி பெற்றார். பின்னர் மீண்டெழுந்த அல்கராஸ் 6-4, 7-6(3) என இரண்டு செட்டுகளையும் கைப்பற்றினார்.

இதன்மூலம் முதல்முறையாக சீன ஓபனில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் அல்கராஸ். கடந்த முறை அரையிறுதியில் அல்கராஸை வீழ்த்தி சின்னா் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியதில், அல்கராஸ் 6 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

இந்தப் போட்டி 3 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்றது. சீனா ஓபன் வரலாற்றில் இதுதான் அதிகமான நேரம் நடைபெற்ற போட்டியாக இருக்கிறது.

A historic match ✨@carlosalcaraz’s and @janniksin’s #2024ChinaOpen final match is the longest men’s singles match in #ChinaOpen history, lasting 3 hours and 21 minuets#AllForPassionpic.twitter.com/OX9sPDAZ6j

— China Open (@ChinaOpen) October 2, 2024

நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் இருவரும் இரண்டிரண்டாக வென்றுள்ளார்கள். சின்னர் – ஆஸி. ஓபன், அமெரிக்கா ஓபன் பட்டங்களையும் அல்கராஸ் – பிரான்ஸ் ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024