சீனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு தகுதி

இவர் காலிறுதியில் கரேன் கச்சனோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

பீஜிங்,

பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டச்சு வீரரான கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் காலிறுதியில் கரேன் கச்சனோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Related posts

பாண்ட்யா இல்லை.. மும்பை தக்கவைக்க வேண்டியது அந்த 3 வீரர்களை மட்டும்தான் – இந்திய முன்னாள் வீரர்

பென் டக்கெட் அதிரடி சதம்.. ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

விராட் மட்டும் போதும்… மற்ற அனைவரையும் கழற்றி விடுங்கள் – பெங்களூரு அணிக்கு ஆர்பி சிங் அட்வைஸ்