Friday, September 20, 2024

சீனா விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்

by rajtamil
0 comment 44 views
A+A-
Reset

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக புதிய வழக்கை சி.பி.ஐ. கடந்த 2022-ம் ஆண்டு பதிவு செய்தது. இதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏற்கனவே கோர்ட்டு தடை விதித்திருந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, நேரில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

#BREAKING || சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின்
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் வழங்கி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பஞ்சாப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக வழக்கு
கடந்த 2022… pic.twitter.com/NV7QKv5IfC

— Thanthi TV (@ThanthiTV) June 6, 2024

You may also like

© RajTamil Network – 2024