கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி.
இயக்குநர் சீனு ராமசாமி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். அண்ணன் – தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ள இப்படம், கடந்த செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையும் படிக்க: கடைசி உலகப் போர் படத்தின் ஓடிடி வெளீயீட்டுத் தேதி!
இப்படத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் இப்படம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வரும் அக். 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.