சுக்கிர யோகம் தரும் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் இன்னல்கள் தீர்ந்து இன்பங்கள் தேடி வரும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை என்றாலே வழிபாட்டிற்கு உரிய நாள் என்பது அனைவரும் அறிந்ததே. விரதமிருப்பது, பூஜை செய்வது, வழிபாடு செய்வது என அனைத்து விதமான தெய்வ காரியங்களுக்கும் வெள்ளிக்கிழமை உகந்த நாளாகும்.

குறிப்பாக, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மன் வழிபாட்டுக்கு சிறந்தது. மகாலட்சுமியை விரதம் இருந்து வணங்கவேண்டிய அற்புதமான நாள். அஷ்ட லட்சுமியரையும் விரதம் இருந்து வழிபடவேண்டிய நன்னாள். சாந்த சொரூபினியையும் உக்கிர தேவதையையும் வணங்கி அவர்களின் அருளைப் பெறவேண்டிய நாள். வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் இன்னல்கள் தீர்ந்து இன்பங்கள் தேடி வரும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீடு மற்றும் வாசலைச் சுத்தம் செய்துவிட்டு ஆறு மணிக்குள் பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டில் உள்ள அம்மன் உருவப்படத்திற்கு பூஜை செய்து மனதார வழிபட வேண்டும். வழிபடும் தெய்வத்தை போற்றக்கூடிய மந்திரங்களை சொல்லி வணங்கினால் இன்னும் சிறப்பு. இதில் மொழி என்பது ஒரு பொருட்டல்ல. புரியாத மொழியில் உள்ள ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து உச்சரிப்பதைவிட, தாய்மொழியில் அம்மனின் திருநாமங்களை போற்றி வணங்கினாலே போதும். அன்னையின் அருட்பார்வை நமக்கு நிச்சயம் கிட்டும்.

தீப ஒளியில் அம்மனின் கண்களைப் பார்க்கையில் மனது ஒருநிலைப்படும். அத்துடன், வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்றும் வழிபடலாம். இவ்வாறு தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்வதால் வீட்டில் உள்ள சிக்கல்கள் தீரும்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் அருளைப் பெறவேண்டுமெனில், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை மனதார வணங்கினாலே போதும். விரதம் இருந்து சக்தியை வணங்குங்கள். மகாலக்ஷ்மியை விரதம் இருந்து வழிபடுங்கள். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

You may also like

© RajTamil Network – 2024