Wednesday, October 2, 2024

சுதந்திர தின விடுமுறை: நாளை 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset
RajTamil Network

சுதந்திர தின விடுமுறை: நாளை 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு

சுதந்திர தினம் மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினம் மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு புதன்கிழமை (ஆக.14) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை (ஆக.14) 470 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (ஆக.16) மற்றும் சனிக்கிழமை(ஆக.17) 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 70 பேருந்துகளும், வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை 65 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மற்றும் பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாள்களில் 20 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் , ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024