Saturday, September 28, 2024

சூடானில் பெரும் வெள்ளப்பெருக்கு: அணை உடைந்து 60 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் மாயம்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கார்டோம்,

கிழக்கு சூடானில் உள்ள அர்பாத் அணை நேற்று முன்தினம் இடிந்து விழுந்ததில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு குறைந்தது 60 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செங்கடல் மாநிலத்தின் நீர் கழகத்தின் தலைவர் ஓமர் இசா தாஹிர் கூறுகையில், "அணை உடைந்ததால் மாநிலத்தின் தலைநகரான போர்ட் சூடானுக்கு அருகிலுள்ள கிராமங்கள் பேரழிவிற்கு உட்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை வெளியேற்றுவதே முன்னுரிமையாக கொண்டு மீட்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

அணைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உடனடியாக் மீட்புப்பணிகள் தேவைப்படுகிறது. தண்ணீரில் இருந்து தப்பிக்கும் நபர்களுக்கு தேள் மற்றும் பாம்பு கடி போன்ற அபாயங்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

இதனிடையே கனமழை காரணமாக அணை இடிந்து விழுந்ததால், வண்டல் மண்ணுடன் சேர்ந்த கடுமையான வெள்ளம், அருகிலுள்ள கிராமங்களை அழித்தது. இதனால் மீட்பு முயற்சிகளை கடினமாகி உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

போர்ட் சூடானுக்கு வடக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அணை, 25 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தைக் கொண்டிருந்தது. மேலும் நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024