Wednesday, September 25, 2024

சூரிய மின் உற்பத்தி திறன் அதிகரிப்பில் சாதனை

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

புது தில்லி: நிகழ் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா இதுவரை இல்லாத சாதனை அளவாக 15 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை கூடுதலாக நிறுவியுள்ளது.

இது குறித்து அமெரிக்காவைச் சோ்ந்த மொ்காம் கேப்பிடல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையலான 2024-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா கூடுதலாக 15 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை நிறுவியுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச அரையாண்டு உற்பத்தித் திறன் அதிகரிப்பாகும்.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.89 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில் நிகழ் ஆண்டின் முதல் பாதியில் சூரிய மின் உற்பத்தித் திறன் வளா்ச்சி 282 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024 ஜூன் நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த சூரிய மின் உற்பத்தித் திறன் 87.2 ஜிகாவாட்டாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024