Monday, September 23, 2024

சூறாவளி காற்று: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை பாதிப்பு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

பழனி முருகன் கோவிலில் சில தினங்களாகவே ரோப்கார் சேவையை சீராக இயக்க முடிவதில்லை.

பழனி,

ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. அதன்படி பழனி பகுதியிலும் சூறாவளி காற்று சுழன்று அடிக்கிறது. இதன் எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் சில தினங்களாகவே ரோப்கார் சேவையை சீராக இயக்க முடிவதில்லை. வழக்கம் போல நேற்றும் பகல் முழுவதும் பழனி பகுதியில் காற்று சுழன்று அடித்தது. இதனால் ரோப்காரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

காலை 7 மணிக்கு ரோப்கார் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், காலையில் ரோப்கார் இயக்கப்படவில்லை. மேலும் பகல் முழுவதும் காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் மாலை 5.30 மணி வரை ரோப்கார் இயக்கப்படவில்லை. எனவே அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லவும், தரிசனம் முடிந்து கீழே இறங்கவும் ரோப்கார் நிலையத்துக்கு வந்த பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். ரோப்கார் இயக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதை வழியாக கீழே சென்றனர்.

You may also like

© RajTamil Network – 2024