செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் – ஜவாஹிருல்லா வரவேற்பு

புதுக்கோட்டை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"15 மாதம் சட்டப் போராட்டம் நடத்தி சுப்ரீம் கோர்ட்டால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் தியாகம் போற்றத்தக்கது.

வழக்கு விசாரணை தொடங்காமலேயே 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதிகாரத்திற்கு அஞ்சாமல் தலை வணங்காமல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திப் பிணை பெற்றிருக்கிறார். உடல் நலத்தில் சற்று குன்றி இருந்தாலும் மன தைரியத்தில் விஞ்சி நின்று அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறார். இனி வரும் நாட்கள் மீண்டும் மக்கள் சேவையைத் தொடங்க மனப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு