செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

நமது நிருபர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (செப்.26) அளிக்க உள்ளது.

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பிஎம்எல்ஏ வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மற்றும் வழக்கு விசாரணையில் தாமதம் தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

செந்தில்பாலாஜி தரப்பில் வழக்குரைஞர் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, சித்தார்த் லூத்ரா உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர்.

அமலாக்கத் துறையின் தரப்பில் துஷார் மேத்தா, வழக்குரைஞர் úஸôஹெப் ஹுசேன், இடையீட்டு மனுதாரர் ஒய்.பாலாஜி தரப்பில் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசனுடன் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அஹ்ஸனுதின் அமானுல்லா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நீதிபதி அபய் எஸ்.ஓகா அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

UP: BJP Leader Princy Chauhan Accuses Toll Employee Of Misbehaviour; Stages Protest

‘Will Get Married For Such Gifts’: Netizens React To Couple Presented With Coldplay Tickets On Wedding Day; Video Viral

Bengaluru Weather Update: IMD Predicts Moderate Showers With Thunder & Lightning; AQI In Good Category