செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை மட்டும் விசாரிக்கப் போகிறீர்களா அல்லது அவர் மீதான அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கப் போகிறீர்களா என அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினர்.

விளம்பரம்

இது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் சிறு குறிப்பு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. விளக்கமான ஆவணத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையும் படிக்க:
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்கலாமா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

இதையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த தீர்ப்பின்போது, செந்தில் பாலாஜி மீதான அனைத்து வழக்குகள் குறித்தும் அமலாக்கத்துறை விசாரிக்கலாமா வேண்டாமா என உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
bail rejected
,
Senthil Balaji
,
Supreme court

You may also like

© RajTamil Network – 2024