செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சென்னை,

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றம் வழங்கிய நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை 14ம் தேதி ஒத்திவைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024