Tuesday, September 24, 2024

சென்செக்ஸ், நிஃப்டி 1 சதவீதத்திற்கு மேல் சரிவு!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

மும்பை: சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 1 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்த வந்த இந்திய பங்குச் சந்தை, 30-பங்கு கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் ஆனது 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183.93 ஆக இருந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 969.70 புள்ளிகள் சரிந்து 81,231.46 புள்ளிகளாக நிலைபெற்றது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 292.95 புள்ளிகள் சரிந்து 24,852.15 புள்ளிகளாக உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 நிறுவனங்களில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 4 சதவிகிதம் சரிந்த நிலையில் என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பிபிசிஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐடிசி ஆகிய பங்குகளும் சரிந்தன.

எல்டிஐ மைண்ட்ட்ரீ, டிவிஸ் லேப்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஆட்டோ, பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம், தொலைத்தொடர்பு, ஐடி, ரியாலிட்டி, மூலதன பொருட்கள் துறைகள் 1 முதல் 3 சதவிகிதம் சரிவுடனும், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.4 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவிகிதமும் சரிந்தன.

இன்றைய வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 5.31 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனமானது முந்தைய அமர்வில் ரூ.465.68 லட்சம் கோடியிலிருந்து ரூ.460.40 லட்சம் கோடியாக சரிந்ததுள்ளது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் சரிந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று ரூ.688.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.14 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.79 டாலராக உள்ளது.

இன்றிரவு வெளியிடப்படவுள்ள அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளால் சந்தையில் குறுகிய கால பாதிப்பு ஏற்படும் என்று ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு ஆலோசகர் வி.கே. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024