Tuesday, October 22, 2024

சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு! இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பங்குச்சந்தைகள் இன்றும்(அக். 4) கடும் சரிவைச் சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,244.25 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், வர்த்தக நேர முடிவில் 808.65 புள்ளிகள் குறைந்து 81,688.45 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 235.50 புள்ளிகள் குறைந்து 25,014.60 புள்ளிகளில் நிறைவுற்றது.

நிஃப்டியில் இன்ஃபோசிஸ் (1.51%), ஓஎன்ஜிசி (1.18%), ஹெச்டிஎஃப்சி லைஃப் (1%), டாடா மோட்டார்ஸ் (0.85%), விப்ரோ (0.65%) ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் பெற்றன.

எம்&எம் (-3.54%), பஜாஜ் ஃபைனான்ஸ் (-2.86%), ஏசியன் பெயிண்ட்ஸ் (-2.40%), நெஸ்லே இந்தியா (-2.33%), பிபிசிஎல் (-2.31%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தது.

சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள்: இன்ஃபோசிஸ் (1.33%), டெக் மஹிந்திரா (0.83%), விப்ரோ (0.68%), டாடா மோட்டார்ஸ் (0.51%), ஆக்சிஸ் வங்கி (0.50%).

நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா (3.58% சரிவு), பஜாஜ் ஃபைனான்ஸ் (3.01% சரிவு), நெஸ்லே இந்தியா (2.85% சரிவு), ஏசியன் பெயிண்ட்ஸ் (2.49% சரிவு), பார்தி ஏர்டெல் (2.09% சரிவு).

இதையும் படிக்க | ‘மோடியின் சக்கரவியூகத்தை ஹரியாணா மக்கள் உடைப்பார்கள்’ – ராகுல் காந்தி

கடந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் புதிய உச்சத்தை அடைந்து சாதனைப் படைத்த நிலையில், இந்த வாரம் முழுவதும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, செபியின் புதிய விதிகள் உள்ளிட்டவை பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024