Saturday, September 21, 2024

சென்னையில் ஓவியச்சந்தை – அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

சென்னை எழும்பூரில் நடைபெறும் ஓவியச்சந்தையை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் கலை பண்பாட்டுத் துறை மற்றும் அரசு கவின் கலைக் கல்லூரி இணைந்து நடத்தும் 100 ஓவிய, சிற்பக் கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச்சந்தையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கலைபண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கலைஞர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் 'ஓவியச்சந்தை' திட்டத்தினை செயல்படுத்திட ரூ.10 லட்சம் நிதிஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணையின் அடிப்படையில் சென்னையில், 3.8.2024, 4.8.2024 மற்றும் 5.8.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக்கலைப்படைப்பு களைக்காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டத்தினை செயல்படுத்தி அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களிடமிருந்து 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

100 ஓவிய, சிற்பக் கலைஞர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்டர் கலர், கேன்வாஸ், ஆயில்கலர், அக்ரலிக், மிக்ஷர்மீடியா, பென்சில், பிரிண்ட்மேக்கிங் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச்சந்தை இன்று (3.8.2024), சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அரங்கில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனால் தொடங்கிவைக்கப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, அரசு அருங்காட்சியகங்களின் இயக்குநர் கவிதாராமு, இ.ஆ.ப., சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியின் முதல்வர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஓவியச்சந்தை திட்டமானது தமிழ்நாட்டினை சார்ந்த ஓவிய, சிற்பக்கலைஞர்கள் பயன்பெறும்பொருட்டு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம்.

ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்காக மாநில அளவிலான ஓவிய கண்காட்சி நடத்துதல், சிறந்த கலைப் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குதல், சிறந்தகலை ஆசிரியர்களுக்கும், கலைநூல் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்குதல் மற்றும் ஓவிய, சிற்பக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் மாநில அளவில் கலைச்செம்மல் என்ற விருதுகள் வழங்குதல், மண்டல கலைக்காட்சிகள் நடத்தி சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்குதல், தனிநபர்/குழுவாக ஓவிய கண்காட்சி நடத்த நிதியுதவி வழங்குதல், அரசு கவின் கலைக்கல்லூரியில் பயிலும் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு படிப்பு உதவித்தொகை வழங்குதல்போன்ற பல்வேறு திட்டங்களை ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்காக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

கலையினை வாழவைப்பதோடு, கலைஞர்களையும் வாழவைத்திட ஏதுவாக, ஓவியச்சந்தை கண்காட்சியினை திரளான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள், ஓவியர்கள், சிற்பிகள் வருகை தந்து கண்டு களிப்பதோடு, கலைஞர்களை ஊக்கவிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், கலைஞர்களின் கலைப்படைப்புகளை வாங்கிடவும் அழைக்கப்படுகிறார்கள்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024