சென்னையில் பரவலாக கனமழை: அடுத்த 3 மணி நேரம் தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு

சென்னையில் பரவலாக கனமழை: அடுத்த 3 மணி நேரம் தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரம் வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசையில் இருந்து மேகக்கூட்டங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதைகள் மழை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ள தெருக்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழையால் போக்குவரத்து பாதிப்பு. பெரம்பூர் சுரங்கப்பாதையில் நீர் தேங்கிய காரணத்தால் மூடப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருவெற்றியூர், எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, மணலி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பதிவாகி உள்ளது. குன்றத்தூர், பொன்னேரி மற்றும் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் மழை பொழிந்து வருகிறது.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!