Monday, October 21, 2024

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

சென்னை,

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது

You may also like

© RajTamil Network – 2024